/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'நம் புத்திக்குள் காஞ்சி மகா பெரியவர் வந்தால் ஆன்மா துாய்மையாகி விடும்''நம் புத்திக்குள் காஞ்சி மகா பெரியவர் வந்தால் ஆன்மா துாய்மையாகி விடும்'
'நம் புத்திக்குள் காஞ்சி மகா பெரியவர் வந்தால் ஆன்மா துாய்மையாகி விடும்'
'நம் புத்திக்குள் காஞ்சி மகா பெரியவர் வந்தால் ஆன்மா துாய்மையாகி விடும்'
'நம் புத்திக்குள் காஞ்சி மகா பெரியவர் வந்தால் ஆன்மா துாய்மையாகி விடும்'
ADDED : ஜன 06, 2024 12:54 AM

கோவை;ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், '18ம் ஆண்டு எப்போ வருவாரோ' ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில் நேற்று, 'காஞ்சி மகாபெரியவர்' எனும் தலைப்பில், டாக்டர் சுதா சேஷய்யன் பேசியதாவது:
நமக்கு வழிகாட்டும், நல்லது கற்றுத்தருவோரை நாம் பெரியவர்கள் என்று குறிப்பிடுவோம். அப்படி நமக்கெல்லாம் வழிகாட்டியாக இருப்பவர்தான் மகா பெரியவர். மகா பெரியவர், ஆன்மாவை துாய்மையாக வைத்துக்கொள்ள, நாம் நம் முன்னோர்கள் கற்பித்த முறைகளை சரியாக செய்து வர வேண்டும் என்கிறார்.
சிறு வயதில் நம் முன்னோர், குழந்தைகளிடம் 'தவறு செய்தால் தெய்வம் கண்ணை குத்திவிடும்' என கூறி வளர்ப்பர். அது உண்மை இல்லை என்று குழந்தைக்கு தெரிந்தாலும், தவறு செய்யக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. தெய்வம் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற எண்ணம் மனதில் இருந்தது. எப்போது தெய்வம் இல்லை என்று கூற துவங்கினார்களோ, இந்த சமூகத்தில் தீங்குகள், தவறுகள், குற்றங்கள் அதிகரிக்க துவங்கி விட்டன.
நம் சிந்தனைக்குள், புத்திக்குள் காஞ்சி மகா பெரியவர் போன்ற மகான்களை கொண்டு வந்தால், ஆன்மாவை துாய்மையாக வைத்துக்கொள்ள முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.