Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விபத்தில்லா கோவை உருவாக்க மாணவர்களுக்கு அழைப்பு

விபத்தில்லா கோவை உருவாக்க மாணவர்களுக்கு அழைப்பு

விபத்தில்லா கோவை உருவாக்க மாணவர்களுக்கு அழைப்பு

விபத்தில்லா கோவை உருவாக்க மாணவர்களுக்கு அழைப்பு

UPDATED : மார் 24, 2025 08:15 AMADDED : மார் 23, 2025 11:22 PM


Google News
அன்னுார் : விபத்தில்லா கோவை உருவாக மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மாணவ, மாணவியரின் நாட்டு நலப் பணி திட்ட ஒரு வார முகாம் குன்னத்தார் ஊராட்சியில் நடந்தது. இதில் 'விபத்தில்லா கோவை' என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

'உயிர்' அமைப்பின் திட்ட ஆலோசகர் திருமூர்த்தி பேசுகையில், ''கோவை மாவட்டத்தில் சராசரியாக தினமும் இருவர் விபத்தில் உயிரிழக்கின்றனர். 10 பேர் காயமடைகின்றனர். ஹெல்மெட் அணியாதது, காரில் சீட் பெல்ட் அணியாதது, அதிக வேகத்தில் செல்வது, வளைவுகளில் வாகனங்களை முந்தி செல்வது, போக்குவரத்து விதிகளை பின்பற்றாதது என பல காரணங்களால் விபத்துகள் ஏற்படுகிறது. விபத்துகளால் ஊனமுற்றோர் அதிகரித்து வருகின்றனர். போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம். விபத்தில்லா கோவை உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.

விபத்தை தவிர்ப்பது குறித்து காணொளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

கூட்டத்தில், நுாலகர் தர்மலிங்கம் தமிழின் சிறப்பு குறித்தும், தமிழுக்காக பாடுபட்ட அறிஞர்கள் மற்றும் திருக்குறள் குறித்தும் பேசினார். மாணவி ரேணுகா பிரியா வரவேற்றார். மாணவி சந்தியா நன்றி தெரிவித்தார்.

குன்னத்துார் பழைய ஊராட்சி அலுவலகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குப்பைகளை அகற்றுதல் மற்றும் துாய்மை பணி நடைபெற்றது.

பட விளக்கம் : அன்னுார் அருகே குன்னத்தூரில் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us