/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'கூட்டத்தை கூட்டுறேன்; பாக்குறயா....பாக்குறயா!' போலீசாரை மிரட்டினார்; இப்போது கம்பி எண்ணுகிறார்'கூட்டத்தை கூட்டுறேன்; பாக்குறயா....பாக்குறயா!' போலீசாரை மிரட்டினார்; இப்போது கம்பி எண்ணுகிறார்
'கூட்டத்தை கூட்டுறேன்; பாக்குறயா....பாக்குறயா!' போலீசாரை மிரட்டினார்; இப்போது கம்பி எண்ணுகிறார்
'கூட்டத்தை கூட்டுறேன்; பாக்குறயா....பாக்குறயா!' போலீசாரை மிரட்டினார்; இப்போது கம்பி எண்ணுகிறார்
'கூட்டத்தை கூட்டுறேன்; பாக்குறயா....பாக்குறயா!' போலீசாரை மிரட்டினார்; இப்போது கம்பி எண்ணுகிறார்
ADDED : பிப் 12, 2024 02:57 AM

கோவை:ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட, மைவி3 ஆட்ஸ் நிர்வாக இயக்குனர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையை தலைமையிடமாக கொண்டு, மைவி3 ஆட்ஸ் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும் இந்த ஆன்லைன் நிறுவனம் இயங்கி வருகிறது.
புகாரின்பேரில், இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்தி ஆனந்த் மீது, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, நிர்வாகிகள் 180 பேருடன் வந்த சத்தி ஆனந்த், தங்களை குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மனு அளித்தார். அத்துடன், போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்தே ஆக வேண்டும் எனக்கூறி, திடீரென ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கலைந்து செல்ல கூறியும் மறுத்த சத்தி ஆனந்த், ரேஸ்கோர்ஸ் போலீசாரை மிரட்டும் வகையில், சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு லட்சக்கணக்கான ஆதரவாளர்களை திரட்டுவேன் எனவும், திங்கள்கிழமை கலெக்டர் அலுவலகம் முன் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் வகையில், தர்ணாவில் ஈடுபடுவேன் எனவும் ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து, போலீசார் சத்தி ஆனந்த் மற்றும் அவரது நிர்வாகிகள், 180 பேரையும் கைது செய்து, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் முன் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சிலர், திரள முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இரவு, 11:30 மணியளவில் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, சத்தி ஆனந்தை மீண்டும் கைது செய்து, நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி அவரை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். போலீசார் அவரை நேற்று முன் தினம் இரவு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.