/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மண்ணை காக்க மனித குலம் ஒன்றிணைய வேண்டும்: சத்குரு மண்ணை காக்க மனித குலம் ஒன்றிணைய வேண்டும்: சத்குரு
மண்ணை காக்க மனித குலம் ஒன்றிணைய வேண்டும்: சத்குரு
மண்ணை காக்க மனித குலம் ஒன்றிணைய வேண்டும்: சத்குரு
மண்ணை காக்க மனித குலம் ஒன்றிணைய வேண்டும்: சத்குரு
ADDED : மார் 22, 2025 04:58 AM

தொண்டாமுத்தூர்: மண் காப்போம் இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி, 'மண்ணைக் காக்க மனித குலம் ஒன்றிணைய வேண்டும்' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கருத்து தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில், அவர் கூறியுள்ளதாவது: நாம் அனைவரும் மண்ணில் இருந்து பிறக்கின்றோம். மண்ணில் வாழ்ந்து, இறுதியில் மண்ணிலேயே திரும்புகின்றோம். நாம் உருவாக்கிய அனைத்து பிரிவுகள் மற்றும் பிரிவினைகளுக்கும் அப்பால், மண் நம்மை ஒன்றிணைக்கிறது. இதை விழிப்புணர்வுடன் உணரவும், மண்ணைக் காக்கவும், மனித குலம் ஒன்றிணைய வேண்டும்.
நாம் ஒரு செழிப்பான சுற்றுச்சூழலை உருவாக்கினால் மட்டுமே, நமது பொருளாதாரங்கள் செழிக்க முடியும். ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும், தங்கள் நாட்டின் மண்ணை பாதுகாக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். இவ்வாறு, சத்குரு பதிவிட்டுள்ளார்.