/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓட்டல் பூட்டுடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு ஓட்டல் பூட்டுடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு
ஓட்டல் பூட்டுடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு
ஓட்டல் பூட்டுடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு
ஓட்டல் பூட்டுடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு
ADDED : மார் 25, 2025 06:28 AM
கோவை; கோவை, சிங்காநல்லூர் அருகே நீலிகோணாம்பாளையம் ஆர்.கே.கே. நகரை சேர்ந்தவர் பாபு, 52. அதே பகுதியில் கடந்த, 7 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். தினமும் காலை 6:00 மணிக்கு ஓட்டலை திறந்து இரவு, 11:00 மணிக்கு பூட்டுவது வழக்கம்.
நேற்று முன்தினம் காலை, பாபு ஓட்டலை திறக்க சென்றார். அப்போது ஷட்டர் கதவு பாதி திறந்து கிடந்தது. கல்லாவில் இருந்த ரூ.1.50 லட்சம் பணம் திருட்டு போயிருந்தது.
பாபு அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விசாரிக்கின்றனர்.