Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உயர் உரக்கலவை கரைசல் காய்கறி சாகுபடிக்கு உகந்தது

உயர் உரக்கலவை கரைசல் காய்கறி சாகுபடிக்கு உகந்தது

உயர் உரக்கலவை கரைசல் காய்கறி சாகுபடிக்கு உகந்தது

உயர் உரக்கலவை கரைசல் காய்கறி சாகுபடிக்கு உகந்தது

ADDED : செப் 14, 2025 11:06 PM


Google News
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விளை நிலங்களில், உயர் உரக்கலவை கரைசலை உபயோகிக்க தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில், 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், பெரும்பாலான விவசாயிகள் விளைநிலத்துக்கு ரசாயன உரத்தை பயன்படுத்துகின்றனர்.

இதை தவிர்த்து உயர் உரக்கலவை கரைசலை தயாரித்து விளை நிலத்துக்கு பயன்படுத்த வேண்டும் என தோட்டக்கலை துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இந்த உரக்கலவையை தயாரிக்கும் முறை குறித்தும் விலகி உள்ளனர்.

இதில், 2 கிலோ அசோஸ்பைரிலம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா உடன், 10 கிலோ பச்சை சாணியை, 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து தயார் செய்யலாம். இந்த உரக்கலவையை பழ செடிகள், காய்கறி மற்றும் அலங்கார செடிகள் உள்ளிட்டவைகளுக்கு, 2 லிட்டர் வீதத்தில் கொடுத்து வந்தால் பயிர்களின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.

மேலும், பாஸ்போ பாக்டீரியா பயிருக்கு கிடைக்காத, கரையாத நிலையில் இருக்கும் மணிச்சத்தை, அங்கக அமிலங்களை உற்பத்தி செய்து கரைய வைத்து பயிர்கள் நன்கு வளர உதவுகிறது. இதனால், மண்ணின் மணிச்சத்து நிலை நிறுத்தி வேர்கள் செழித்து வளர உதவுகிறது.

எனவே, விவசாயிகள் இது போன்ற இயற்கை முறையிலான உரக்கலவைகளை தயார் செய்து பயிர்களுக்கு கொடுக்க வேண்டும், என, அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us