/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காற்றுடன் பெய்த கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு காற்றுடன் பெய்த கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காற்றுடன் பெய்த கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காற்றுடன் பெய்த கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காற்றுடன் பெய்த கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : ஜூன் 13, 2025 09:46 PM

வால்பாறை; வால்பாறையில், காற்றுடன் பெய்யும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே பெய்ய துவங்கியுள்ளது. தொடர் மழையால், கடந்த மாதம் சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான, மேல்நீராறு அணை நிரம்பியது.
இதே போல் வால்பாறை நகர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை தடுப்பணையும் கடந்த வாரம் நிரம்பியது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் காற்றுடன் கனமழை பெய்கிறது. இதனால் எஸ்டேட் பகுதியில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுலா பயணியரின் வருகை படிப்படியாக குறைந்து வருகிறது.
தொடர் மழையால், வால்பாறையில் உள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர். சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை, 96.44 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 857 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 735 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது. நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:
சோலையாறு - 20, பரம்பிக்குளம் - 4, வால்பாறை - 14, மேல்நீராறு - 32, கீழ்நீராறு - 40, துணக்கடவு - 6, பெருவாரிப்பள்ளம் - 2 என்ற அளவில் மழை பெய்தது.