/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொட்டி தீர்த்த கனமழை; சாலையில் ஓடிய மழை நீர் கொட்டி தீர்த்த கனமழை; சாலையில் ஓடிய மழை நீர்
கொட்டி தீர்த்த கனமழை; சாலையில் ஓடிய மழை நீர்
கொட்டி தீர்த்த கனமழை; சாலையில் ஓடிய மழை நீர்
கொட்டி தீர்த்த கனமழை; சாலையில் ஓடிய மழை நீர்
ADDED : செப் 10, 2025 10:37 PM

தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் வட்டாரத்தில், ஒரு வாரமாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில், நேற்று, அதிகாலை சில இடங்களில் சாரல் மழை பெய்தது. காலைப்பொழுது குளிர்ச்சியாக இருந்தது. நேற்று பகல், திடீரென, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.
மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நரசீபுரம், தேவராயபுரம், தொண்டாமுத்துார், தாளியூர், ஓணாப்பாளையம், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொண்டாமுத்துார் வட்டாரப்பகுதியில் குளிர்ச்சி நிலவியது.