/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மலையில் கன மழை; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: அதிகபட்சமாக நல்லாற்றில் 121 மி.மீ., பதிவுமலையில் கன மழை; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: அதிகபட்சமாக நல்லாற்றில் 121 மி.மீ., பதிவு
மலையில் கன மழை; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: அதிகபட்சமாக நல்லாற்றில் 121 மி.மீ., பதிவு
மலையில் கன மழை; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: அதிகபட்சமாக நல்லாற்றில் 121 மி.மீ., பதிவு
மலையில் கன மழை; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: அதிகபட்சமாக நல்லாற்றில் 121 மி.மீ., பதிவு
ADDED : ஜன 10, 2024 10:24 PM

உடுமலை : உடுமலை பகுதிகளில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது; நல்லாறு அணைப்பகுதியில், அதிகப்பட்சமாக, 121 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், அமராவதி, திருமூர்த்திமலைப்பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், நாள் முழுவதும் கன மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள, அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 88.92 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,949.08 மில்லியன் கனஅடியாகவும், அணைக்கு வினாடிக்கு, 2,711 கனஅடி நீர்வரத்தும் இருந்தது.
அணையிலிருந்து, ஆறு மற்றும் பிரதான கால்வாயில், நேற்றும் உபரி நீர் வெறியேற்றப்பட்டது.
திருமூர்த்திமலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, பாலாறு, நல்லாறு, மத்தளப்பள்ளம் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நேற்று வெள்ளம் வடிந்த நிலையில், கோவில் வளாகம் துாய்மைப்படுத்தப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடந்தன. கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில், வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், பாதுகாப்பு கருதி, நேற்றும் பொதுமக்கள் அனுமதிக்கு தடை செய்யப்பட்டது.
திருமூர்த்தி அணையில், மொத்தமுள்ள, 60 அடியில், நேற்று காலை நிலவரப்படி, 37.47 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கனஅடியில் 1,071.50 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.
அணைக்கு, பாலாற்றின் வழியாக, வினாடிக்கு, 576 கனஅடி நீரும், காண்டூர் கால்வாய் வழியாக, 360 கனஅடி நீர் என, 936 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, பிரதான கால்வாயில், 492 கனஅடி நீர், குடிநீர், 21, இழப்பு, 8 என, 521 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.
மழை பதிவு
நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை, அமராவதி அணைப்பகுதியில், அதிக பட்சமாக, 118 மி.மீ., திருமூர்த்தி அணைப்பகுதியில் - 96, திருமூர்த்தி ஆய்வு மாளிகை பகுதியில் - 103 நல்லாறு அணைப்பகுதியில், அதிகப்பட்சமாக, 121 மி.மீ., மழை பதிவானது.
மடத்துக்குளத்தில் - 45, உப்பாறு அணை - 50, உடுமலையில் - 31, பெதப்பம்பட்டியில் - 25, பூலாங்கிணர் - 43, வரதராஜபுரம், 28 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.