Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுவாணி அணையில் கொட்டும் மழை; 3 நாளில் 8.75 அடி நீர்மட்டம் அதிகரிப்பு

சிறுவாணி அணையில் கொட்டும் மழை; 3 நாளில் 8.75 அடி நீர்மட்டம் அதிகரிப்பு

சிறுவாணி அணையில் கொட்டும் மழை; 3 நாளில் 8.75 அடி நீர்மட்டம் அதிகரிப்பு

சிறுவாணி அணையில் கொட்டும் மழை; 3 நாளில் 8.75 அடி நீர்மட்டம் அதிகரிப்பு

ADDED : மே 27, 2025 12:08 AM


Google News
Latest Tamil News
சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, 26.60 அடியாக நீர் மட்டம் அதிகரித்திருக்கிறது. நேற்று ஒரே நாளில், 5.05 அடி உயர்ந்தது. கடந்த மூன்று நாட்களில் பெய்த மழையில், 8.75 அடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், 18ம் தேதி சாரலாக மழை பெய்ய ஆரம்பித்தது. தினமும் துாறல் பெய்து வந்தது.

23ம் தேதி (வெள்ளிக்கிழமை) 17.85 அடியாக நீர் மட்டம் இருந்தது. கடந்த, 24ம் தேதி தென்மேற்கு பருவ மழை துவங்கியது. அன்றைய தினம், 80 மி.மீ., பதிவானது. அதனால், நீர் மட்டம், 19 அடியாக உயர்ந்தது. மறுநாள், 25ம் தேதி (ஞாயிறு) 85 மி.மீ., பதிவானது. அன்றைய தினம், 2.55 அடி உயர்ந்து, 21.55 அடியாக நீர் மட்டம் அதிகரித்தது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணை பகுதியில், 120 மி.மீ., அடிவாரத்தில், 128 மி.மீ., பதிவானது. ஒரே நாளில், 5.05 அடி நீர் மட்டம் அதிகரித்து, 26.60 அடிக்கு நீர் இருப்பு இருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் பெய்த மழைக்கு, 8.75 அடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.

கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமப் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, 6.5 கோடி லிட்டர் தண்ணீர் தருவிக்கப்பட்டது. அதில், மாநகராட்சி பகுதிக்கு மட்டும், 6 கோடி லிட்டரும், 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வழியோர கிராமப் பகுதிகளுக்கும் வினியோகிக்கப்பட்டது.

மாவட்டத்தில் மழை அளவு


மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு: பெரியநாயக்கன்பாளையம் - 13.40 மி.மீ., மேட்டுப்பாளையம் - 18, பில்லுார் அணை - 22, அன்னுார் - 9.6, கோவை தெற்கு - 16, சூலுார் - 18.40, வாரப்பட்டி - 22, மதுக்கரை தாலுகா - 43.20, போத்தனுார் - 39.20, மாக்கினாம்பட்டி - 80, கிணத்துக்கடவு - 22, ஆனைமலை தாலுகா - 28, ஆழியார் - 60.20, சின்கோனா - 124, சின்னக்கல்லார் - 213, வால்பாறை - 114, சோலையார் - 99 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us