/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவில்களில் அனுமன் ஜெயந்தி வழிபாடுகோவில்களில் அனுமன் ஜெயந்தி வழிபாடு
கோவில்களில் அனுமன் ஜெயந்தி வழிபாடு
கோவில்களில் அனுமன் ஜெயந்தி வழிபாடு
கோவில்களில் அனுமன் ஜெயந்தி வழிபாடு
ADDED : ஜன 10, 2024 10:26 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆஞ்சநேயர் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
அவ்வகையில், பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள, கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை, சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது.
ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது, வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல, அன்சாரி வீதி சிவராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள சன்னதியில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.