/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஊராட்சிகளில் அரையாண்டு சொத்து வரி செலுத்தலாம் ஊராட்சிகளில் அரையாண்டு சொத்து வரி செலுத்தலாம்
ஊராட்சிகளில் அரையாண்டு சொத்து வரி செலுத்தலாம்
ஊராட்சிகளில் அரையாண்டு சொத்து வரி செலுத்தலாம்
ஊராட்சிகளில் அரையாண்டு சொத்து வரி செலுத்தலாம்
ADDED : ஜூன் 22, 2025 11:20 PM
அன்னுார்: கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களில், 228 ஊராட்சிகளில், சொத்து வரி, குடிநீர் கட்டணம், லைசென்ஸ் கட்டணம், தொழில்வரி வசூலிக்கப்படுகிறது.
இந்த நிதியாண்டில், கடந்த 19ம் தேதி வரை, ஆன்லைன் வாயிலாக வரி செலுத்த முடியவில்லை. இதற்கென வடிவமைத்த சர்வர் மேம்படுத்தும் பணி நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிதாக வீடு கட்டிய பலர், தற்காலிக மின் இணைப்புக்கு, ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய்க்கு மேல் செலுத்தி வந்தனர். வீட்டு வரி ரசீது தரப்படாததால் அதிக மின்கட்டணம் செலுத்தியும், வங்கி அடமான கடன் பெற முடியாமலும் தவித்தனர்.
இந்நிலையில் 78 நாட்களுக்குப் பிறகு கடந்த 19ம் தேதி கிராம ஊராட்சிகளில் ஆன்லைன் வாயிலாக அரையாண்டு வரி வசூலிக்கும் சர்வர் இயங்கியது.
இதுகுறித்து கணேசபுரம் மக்கள் கூறுகையில், 'இதுவரை ஆண்டுக்கு ஒரு முறை வசூலிக்கப்பட்டு வந்த சொத்து வரி, இனி அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்தலாம் என தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றனர்.