Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கால காலேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி, லட்சார்ச்சனை

கால காலேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி, லட்சார்ச்சனை

கால காலேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி, லட்சார்ச்சனை

கால காலேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி, லட்சார்ச்சனை

ADDED : மே 11, 2025 12:17 AM


Google News
கோவில்பாளையம்: கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று (11ம் தேதி) குரு பெயர்ச்சி விழாவும், நாளை லட்சார்ச்சனையும் நடக்கிறது.

கொங்கு நாட்டு திருக்கடையூர் என்று அழைக்கப்படும், 1,300 ஆண்டுகள் பழமையான, கோவில்பாளையம் கால காலேஸ்வரர் கோவிலில், இன்று (11ம் தேதி) காலை 11:00 மணிக்கு, குருபெயர்ச்சி விழா, சிறப்பு யாக பூஜையுடன் துவங்குகிறது. பிற்பகல் 1:19 மணிக்கு, குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.

நாளை காலை 9:00 மணிக்கு, லட்சார்ச்சனை விழா துவங்குகிறது. மதியம் 1:00 மணி வரையும், பின்னர், மாலை 4:00 மணி முதல், இரவு 7:00 மணி வரையும், லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

'விழாவில் பங்கேற்று, பிரசாதம் பெற 99440 67896 என்னும் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்' என அறங்காவலர் குழு தலைவர் நாகராஜ், செயல் அலுவலர் தேவி பிரியா மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us