Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காமாட்சிபுரி ஆதினம் சக்தி பீடம் கோவிலில் குண்டம் விழா நிறைவு; பக்தர்கள் பரவசம்

காமாட்சிபுரி ஆதினம் சக்தி பீடம் கோவிலில் குண்டம் விழா நிறைவு; பக்தர்கள் பரவசம்

காமாட்சிபுரி ஆதினம் சக்தி பீடம் கோவிலில் குண்டம் விழா நிறைவு; பக்தர்கள் பரவசம்

காமாட்சிபுரி ஆதினம் சக்தி பீடம் கோவிலில் குண்டம் விழா நிறைவு; பக்தர்கள் பரவசம்

ADDED : ஜன 29, 2024 12:34 AM


Google News
கோவை:காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடம் கோவிலில் குண்டம் விழா நேற்று விளக்கு வழிபாடுடன் நிறைவடைந்தது. திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஒண்டிப்புதுார் அருகே, கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடம் கோவிலில், மகாசக்தி அங்காளபரமேஸ்வரி அன்னையின், 43ம் ஆண்டு திருக்கல்யாண மகா உற்சவம், குண்டம் திருவிழா கடந்த, 22ம் தேதி துவங்கியது.

விநாயகர் வேள்வி, 108 விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், முளைப்பாரி இடுதல், மஹா சரஸ்வதி வேள்வி, புஷ்ப பல்லக்கு உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழாவை முன்னிட்டு, குண்டத்துக்கு பூ இடுதல், கரும்பு சமர்ப்பித்தல், குண்டத்துக்கு அக்னி இடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நோயில் இருந்து குணமடைந்தவர்கள், மூடிய குண்டத்தில் உப்பு செலுத்தி வழிபட்டனர். காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடந்த இவ்விழாவில், உலகில் அமைதி நிலவவும், மக்கள் நிறைவாக வாழவும், பல்வேறு பூஜைகள் தினமும் நடத்தப்பட்டன.

நிறைவு நாளான நேற்று பரிவேட்டை, அசுரனை வதம் செய்தல், பேச்சியம்மன் படையல் பூஜை, பார்வை இழந்தோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us