Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜி.எஸ்.டி. குறைப்பு; விற்பனை அதிகரிப்பு; வர்த்தகர்கள் மகிழ்ச்சி!

ஜி.எஸ்.டி. குறைப்பு; விற்பனை அதிகரிப்பு; வர்த்தகர்கள் மகிழ்ச்சி!

ஜி.எஸ்.டி. குறைப்பு; விற்பனை அதிகரிப்பு; வர்த்தகர்கள் மகிழ்ச்சி!

ஜி.எஸ்.டி. குறைப்பு; விற்பனை அதிகரிப்பு; வர்த்தகர்கள் மகிழ்ச்சி!

ADDED : செப் 26, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
ஜி. எஸ்.டி. வரி சீரமைப்பு செய்ததால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரிக்கும் என, வர்த்தகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், விற்பனையும் அமோகமாக உள்ளது என, அவர்கள் தெரிவித்தனர்.

மக்களுக்கு ஜாக்பாட்

பண்டிகை காலத்தில் வாகனம் வாங்க விரும்பி காத்திருப்போருக்கு ஜி.எஸ்.டி. சீரமைப்பு கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. புது வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே கார் வைத்திருப்போருக்கும் இந்த சீரமைப்பு ஜாக்பாட் தான். சில நாட்களாக விற்பனை அதிகரித்துள்ளது. என்கொயரியும், புக்கிங்கும் விறுவிறுப்பாக உள்ளது. தாங்கள் ஒதுக்கிய பட்ஜெட்டில் உயர் ரக காரே கிடைக்கும் என்பதால், மக்களுக்கு அதீத சந்தோஷம். ஏற்கனவே கார் வைத்திருப்போர், அடுத்த மாடல் கார் வாங்கவும் இதுவே சரியான தருணமாக கருதுகின்றனர்.

ஹெக்டர் மாடல் ரூ.14,50,000ல் இருந்து ரூ.14 லட்சம் என, 50 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. கிளஸ்டர் மாடல் ரூ.42,63,000ல் இருந்து ரூ.39,80,000மாக குறைந்துள்ளது; ரூ.2,83,000 விலை குறைந்துள்ளது. எஸ்யுவி கார்களுக்கு நல்ல புக்கிங் உள்ளது. ஏஸ்டர் மாடலுக்கு 35,000 ரூபாய் வரை குறைந்துள்ளது. விழாக்கால சலுகையுடன் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் புக்கிங் செய்து வருகின்றனர். -ஜெயராம், பொது மேலாளர் (விற்பனை), ரமணி கார்ஸ் - எம்.ஜி.

மக்களுடன் எங்களுக்கும் மகிழ்ச்சியே!

ஜி.எஸ்.டி.யில் சீரமைப்பு ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன் இருந்த விற்பனை மற்றும் என்கொயரிகள், கடந்த 21ம் தேதி வரை சிறிது குறைந்திருந்தது. ஆனால், 22ம் தேதி முதல் முன்பிருந்ததை விட, இரு மடங்கு என்கொயரி, புக்கிங் மற்றும் விற்பனை உள்ளது. பேசினோ மாடல், ரூ.1,21,500ல் இருந்து, ரூ.1,13,500க்கு விற்கப்படுகிறது; ரூ.8,000 விலை குறைந்துள்ளது. இதேபோல், யமாஹாவின் 70ம் ஆண்டு விழா முன்னிட்டு, நிறுவனத்தின் சலுகை மற்றும் 10 சதவீத ஜி.எஸ்.டி. குறைப்புடன், ரே இசட்ஆர் மாடல், ரூ.1,26,500ல் இருந்து, ரூ.1,11,600 விற்கப்படுகிறது. பைக்குகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இதனால்வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். ஜி.எஸ்.டி., சீரமைப்பால், மக்களோடு எங்களுக்கும் மகிழ்ச்சியே. - நடராஜன், பொதுமேலாளர், சிஏஜி யமாஹா.

குறைந்த விலையில் வாகன உரிமை

ஜி.எஸ்.டி. 2.0 அமலாக்கத்தை வரவேற்கிறோம். இது நாடு முழுவதும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு வாகன உரிமையை மலிவு விலையில் வழங்குவதாக இருக்கும். தற்போது கார் என்பது ஆடம்பரத்துக்கு என்றில்லாமல், இன்றியமையாததாகவும் மாறிவிட்டது. குறைந்த விலையில், இதை மக்களுக்கு விற்பனை செய்வதால், மகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளர்கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் மற்றும் மாறுபாட்டை பொறுத்து ஒரு லட்சம் ரூபாய் முதல் ரூ.3,80,000 வரை சலுகைகளை பெறலாம். இதை உடனடியாக வழங்குகிறோம். 22ம் தேதிக்கு பின் தற்போது வரை, அதிகளவிலான வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்கின்றனர். கோவை, பொள்ளாச்சி, ஊட்டி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூரில் உள்ள எங்கள் அனைத்து கிளைகளிலும் விற்பனை அதிகரித்துள்ளது. - அனிஷ் பிரசன்னா, இணை நிர்வாக இயக்குனர் பிரசன்னா குழுமம்.

கையிருப்பு அதிகரிக்கும்

ஜி.எஸ்.டி.யில் 10 சதவீதம் குறைப்பால், மக்களிடம் பணம் கையிருப்பும் வாங்கும் திறனும் அதிகரிக்கும் தற்போது இருசக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். ஒரு வீட்டில் 2 இரு சக்கர வாகனங்கள் இருப்பதையும் காணலாம். அந்தளவுக்கு வாகனங்களின் தேவை அதிகரித்து விட்டது. இந்த 10 சதவீத வரி குறைப்புக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு உள்ளது. தங்கள் பழைய வாகனத்தை மாற்றி புதிது வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அடுத்த மாடலுக்கு மாற தயாராகி புக்கிங் செய்து வருகின்றனர். வரியில் மாற்றம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து, விற்பனையில் சிறிது தொய்வு ஏற்பட்டது. 22ல் இருந்து விற்பனை அதிகரித்துள்ளது. லைப்டேக்ஸ் மற்றும் இன்சூரன்சும் குறைந்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. இதுபோன்ற காரணங்களால், இரண்டு முதல் மூன்று மடங்கு விற்பனை அதிகரித்துள்ளது. ஸ்பிலெண்டர், ரூ.1,08,000ல் இருந்து, ரூ.99,000க்கு விற்கப்படுகிறது; 9 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. இதேபோல், இரு சக்கர வாகனங்களின் மாடலுக்கு ஏற்ப, ரூ.7,500 முதல் ரூ.15,000 வரை குறைந்துள்ளது. - சிவக்குமார், மேலாண்மை பங்குதாரர்,சுகுணா ஆட்டோமொபைல்ஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us