Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.எப்., சந்தாதாரர்களுக்கு 27ல் குறைதீர்ப்பு கூட்டம்

பி.எப்., சந்தாதாரர்களுக்கு 27ல் குறைதீர்ப்பு கூட்டம்

பி.எப்., சந்தாதாரர்களுக்கு 27ல் குறைதீர்ப்பு கூட்டம்

பி.எப்., சந்தாதாரர்களுக்கு 27ல் குறைதீர்ப்பு கூட்டம்

ADDED : ஜூன் 23, 2025 11:49 PM


Google News
கோவை; கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இணைந்து, சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில், 'நிதி ஆப்கே நிகட்' (Nidhi Aapke Nikat) என்ற பெயரில், குறை தீர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. இம்மாதம், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், 27ம் தேதி நடத்தப்படுகிறது.

கோவை வடவள்ளி, தொண்டாமுத்துார் ரோடு ஓணாப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமலிங்க சவுடாம்பிகை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியிலும், ஊட்டி பந்தலுார் நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள, டான் டீ விருந்தினர் மாளிகையிலும் இக்கூட்டம் நடக்கிறது.

வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ.சி., உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், காலை, 10:30 முதல், 12:30 மணி வரை நேரில் முறையிடலாம். யூ.ஏ.என்., (UAN) எண், வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன உத்தரவு எண் அல்லது இ.எஸ்.ஐ.சி., எண் வைத்திருப்பது அவசியம். பி.எப்., தொடர்பான குறைகளை, pghs.rocbe@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பகிரலாம், என, கோவை மண்டல வைப்பு நிதி கமிஷனர் (2) அனந்தராமன் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us