/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேளாண் பல்கலையில் பட்டமளிப்பு விழா வேளாண் பல்கலையில் பட்டமளிப்பு விழா
வேளாண் பல்கலையில் பட்டமளிப்பு விழா
வேளாண் பல்கலையில் பட்டமளிப்பு விழா
வேளாண் பல்கலையில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 22, 2025 12:08 AM
கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் 45வது பட்டமளிப்பு விழா, வரும் 25ம் தேதி, பல்கலை அரங்கில் நடைபெறவுள்ளது.
விழாவில், கவர்னர் ரவி, தலைமை வகித்து பட்டங்களை வழங்குகிறார். முதன்மை விருந்தினராக, சென்னை தோல் ஏற்றுமதிக் கழக நிர்வாக இயக்குநர் செல்வம் பங்கேற்கிறார். 4,434 மாணவர்கள், பட்டம் பெறுகின்றனர்.
உறுப்புக் கல்லூரிகளில் இருந்து, 1,536 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இருந்து, 2,898 மாணவர்கள் தபால் வாயிலாகவும் பட்டங்களைப் பெறவுள்ளனர்.