ADDED : ஜூலை 01, 2025 12:14 PM
கோவை:
கோவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு, நேற்று கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த இளம்பெண்ணை சோதனையிட்டனர். அவரிடம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர், கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சஜனா, 23 என்பதும், பட்டதாரியான இவர் கேரளாவில் இருந்து, கஞ்சா வாங்கி வந்து சமூக வலைதளங்கள் வாயிலாக, கல்லுாரி இளைஞர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது. அவரிடம் இருந்து, 1.750 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.