/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு ஊழியர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்'; இலவசமாக ரூ.ஒரு கோடிக்கு இன்சூரன்ஸ் அரசு ஊழியர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்'; இலவசமாக ரூ.ஒரு கோடிக்கு இன்சூரன்ஸ்
அரசு ஊழியர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்'; இலவசமாக ரூ.ஒரு கோடிக்கு இன்சூரன்ஸ்
அரசு ஊழியர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்'; இலவசமாக ரூ.ஒரு கோடிக்கு இன்சூரன்ஸ்
அரசு ஊழியர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்'; இலவசமாக ரூ.ஒரு கோடிக்கு இன்சூரன்ஸ்
ADDED : ஜூன் 08, 2025 10:41 PM

கோவை; அரசு ஊழியர்கள் சம்பளம் பெறும்வங்கிகள், ஒரு கோடி ரூபாய்க்கு இலவச இன்சூரன்ஸ் திட்டத்தையும், விபத்தால் நிரந்தர இயலாமை ஏற்பட்டால், ஒரு கோடி ரூபாயையும்வழங்குகிறது.
இது தவிர, அரசு ஊழியருக்கு இயற்கை மரணம் ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாயும், அரசு ஊழியர் எதிர்பாராமல் விபத்தில் இறந்தால், திருமண வயதை எட்டியமகள்களின் திருமண செலவுக்கு 10 லட்சம் ரூபாயும், மகன் அல்லது மகளின் உயர் கல்விதொடர 10 லட்சம் ரூபாய் உதவித்தொகையும் வழங்குவதாக, அரசு ஊழியர்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ள எஸ்.பி.ஐ., ஐ.ஓ.பி., இந்தியன், கனரா, ஆக்சிஸ், பேங்க் ஆப் பரோடா, யூனியன்பேங்க் ஆப் இந்தியா ஆகிய, ஏழு வங்கிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
தமிழக அரசு அரசாணை எண் 113 கருவூலம் மற்றும் கணக்குகள் துறை நாள் 14.5.2025 இதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் தங்களது வங்கிக்கணக்கை இப்புதிய திட்டத்தில் இணைக்க, தங்களது வங்கிக்கு சென்று அங்கு இதற்கென உள்ள பிரத்யேக படிவத்தைபூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர்.
விண்ணப்பத்தோடு வங்கி சேமிப்புக்கணக்கு புத்தகம், அரசுப்பணியாளரின் அடையாள அட்டை, ஏப்ரல் அல்லது மே மாத சம்பள ரசீது, ஆதார், மற்றும் பான் கார்டுகளின் ஜெராக்ஸ் இணைக்க வேண்டும். இத்திட்டத்தில் பலரும் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.
அரசு ஊழியர் சங்கங்கள், தங்கள் உறுப்பினர்களின் நலன் கருதி இப்பணிகளை தாமாக முன்னெடுத்து செய்து வருகின்றன.