/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முன்னாள் மாணவர்களின் பொன்விழா கொண்டாட்டம் முன்னாள் மாணவர்களின் பொன்விழா கொண்டாட்டம்
முன்னாள் மாணவர்களின் பொன்விழா கொண்டாட்டம்
முன்னாள் மாணவர்களின் பொன்விழா கொண்டாட்டம்
முன்னாள் மாணவர்களின் பொன்விழா கொண்டாட்டம்
ADDED : மே 26, 2025 05:29 AM

கோவை; டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில், 1976ம் ஆண்டு 10ம் வகுப்பில் பயின்ற மாணவர்கள், தங்கள் பள்ளி படிப்பை முடித்து, 50 ஆண்டுகள் ஆனதை நினைவுகூர்ந்து, பொன்விழா ஆண்டாக கொண்டாடினர்.
90க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்த முன்னாள் ஆசிரியர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக வரவேற்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும், தங்கள் நினைவுகளைப் பகிர்ந்ததுடன், புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.
நிகழ்வு குறித்து ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி கூறியதாவது:
பள்ளியில் எங்கள் வருகையைப் பதிவு செய்த, பழைய பதிவேட்டினைப் பார்த்து, அதில் உள்ள பெயர்களை அடிப்படையாகக் கொண்டு, முகவரிகளைத் தேடி, தொடர்பு கொண்டு, கடந்த ஆறு மாதங்களாக இந்த நிகழ்வை திட்டமிட்டு ஒருங்கிணைத்தோம்.
இப்பள்ளியில் பயின்ற பலரும் இஸ்ரோ, மத்திய மற்றும் மாநில அரசு துறைகள், மேலும் வெளிநாடுகளில் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். அவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிக்குத் தேவையான உட்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை செய்துதர முன்வந்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.