/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தங்க பத்திர விற்பனை இன்று முதல் துவக்கம்தங்க பத்திர விற்பனை இன்று முதல் துவக்கம்
தங்க பத்திர விற்பனை இன்று முதல் துவக்கம்
தங்க பத்திர விற்பனை இன்று முதல் துவக்கம்
தங்க பத்திர விற்பனை இன்று முதல் துவக்கம்
ADDED : பிப் 12, 2024 01:04 AM
கோவை, பிப்.12 -
தங்கத்தில் முதலீடு செய்ய, விரும்புவோர் தங்க பத்திரம் சேமிப்பு திட்டத்தில் இணையலாம் என, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு வசதியாக, தங்கப்பத்திர விற்பனையை ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, அஞ்சல்துறை செயல்படுத்தி வருகிறது.
பிப்., மாதத்திற்கான விற்பனை இன்று முதல் வரும் வரும் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை, 6 ஆயிரத்து 263 ரூபாய். இத்திட்டத்தின் கீழ், ஒருவர் தம் வாழ்நாளில், ஒரு கிராம் முதல், நான்கு கிலோ வரை தங்க பத்திரங்களை வாங்கலாம்.
இதன் முதலீட்டு காலம் எட்டு ஆண்டுகள். இறுதியில், அன்றைய தேதியில் உள்ள மதிப்பில், தங்க பத்திரங்களை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.
இதற்கு, 2.5 சதவீத வட்டி கணக்கிடப்பட்டு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தங்க பத்திரம் வாங்க, ஆதார் மற்றும் பான் நம்பர், வங்கி கணக்கு அவசியம். தங்க பத்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம் செய்கூலி, சேதராமின்றி தங்கம் சேமிக்கலாம் என, கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கோபாலன் தெரிவித்தார்.