Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜி.ெஹச்.,ல் சிறப்பு டாக்டர்கள் நியமிக்கணும்! மனு கொடுத்து வலியுறுத்தல்

ஜி.ெஹச்.,ல் சிறப்பு டாக்டர்கள் நியமிக்கணும்! மனு கொடுத்து வலியுறுத்தல்

ஜி.ெஹச்.,ல் சிறப்பு டாக்டர்கள் நியமிக்கணும்! மனு கொடுத்து வலியுறுத்தல்

ஜி.ெஹச்.,ல் சிறப்பு டாக்டர்கள் நியமிக்கணும்! மனு கொடுத்து வலியுறுத்தல்

ADDED : மார் 26, 2025 09:15 PM


Google News
பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், சிறப்பு டாக்டர்கள் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, அகில இந்திய விவசாய தொழிலாளர் நலச்சங்கத்தினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது.இதில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், எலும்பு சிகிச்சை, நரம்பு சிகிச்சைக்கான சிறப்பு டாக்டர்கள் இல்லாததால், உரிய சிகிச்சை உரிய நேரத்துக்கு கிடைப்பதில்லை. இதனால், பாதிக்கப்பட்டோர், சிகிச்சைக்காக கோவைக்கு செல்ல வேண்டியதுள்ளது. இதுபோன்று செவிலியர் பற்றாக்குறையும் உள்ளது. 'சிடி' ஸ்கேன், எக்ஸ்ரே, 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மருத்துவமனையில் பிரமாண்ட கட்டடங்கள் இருந்தாலும், சிகிச்சை அளிக்க சிறப்பு டாக்டர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். இதனால், மக்களுக்கு அலைமோதும் நிலை உள்ளது. கோவை செல்ல கால விரயம் ஏற்படும் என்பதால், தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று, அதிக செலவு செய்யும் நிலை உள்ளது. இதை தவிர்க்க, அரசு மருத்துவமனையில் சிறப்பு டாக்டர்கள் நியமிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதில் பாரபட்சம் உள்ளது. தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, பயிர் கடன் பெற்றவர்கள், ஆண்டின் இறுதியில் பணம் செலுத்தினால் போதுமானது. நெற் பயிர் கடன் பெற்ற விவசாயிகள், ஆறு மாதத்தில் திருப்பி செலுத்திவிட்டு, புதிதாக நெற் பயிர் கடன் கோர வேண்டியதுள்ளது.

தென்னைக்கு வழங்குவது போன்று, நெற்பயிர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை கடனை திருப்பி செலுத்தும் வகையில் அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியணை கால்வாய் அருகே, குடிமிசாலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடைவதில்லை. அவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை எதுவும் இல்லை. அவர்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோடை காலத்தில், மனித -- வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்த வேண்டும். கோட்டூர் பகுதியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us