/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வீட்டுமனை வாங்கினால் தங்கம் கிடைக்குதுங்க!வீட்டுமனை வாங்கினால் தங்கம் கிடைக்குதுங்க!
வீட்டுமனை வாங்கினால் தங்கம் கிடைக்குதுங்க!
வீட்டுமனை வாங்கினால் தங்கம் கிடைக்குதுங்க!
வீட்டுமனை வாங்கினால் தங்கம் கிடைக்குதுங்க!
ADDED : பிப் 24, 2024 10:13 PM

கோவை:ஸ்கை ரேண்ட் பிராப்பர்டி மற்றும் ஸ்ரீ சாய் ராம் பிராப்பர்டி டெவலப்பர்ஸ் சார்பில், சரவணம்பட்டியில், 'நிவாரா அவென்யூ' எனும் புதிய வீட்டு மனை விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
சரவணம்பட்டி, கரட்டு மேடு முருகன் கோவில் மற்றும் பி.பி.ஜி, நர்சிங் கல்லுாரிக்கு பின்புறம் ஐ.டி., தொழில் நுட்ப மையத்துக்கு அருகில் மனைகள் அமைந்துள்ளன. சத்தி மெயின் ரோட்டிலிருந்து ஐந்து நிமிட பயண துாரத்தில், நிவாரா அவென்யூவை அடையலாம்.
முதல் விற்பனையை, ஸ்கை ரேண்ட் பிராப்பர்டிஸ் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் கோவை பாபு, ஆனந்த சாந்த குமார் மற்றும் ஸ்ரீ சாய் ராம் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் உரிமையாளர் கோபால் துவக்கிவைத்தனர். கோவில்பாளையத்தை சேர்ந்த சிவரஞ்சனி குடும்பத்தினர் வீட்டுமனையை பெற்றுக்கொண்டனர்.
துவக்க விழா சலுகையாக, மனை புக்கிங் செய்யும் அனைவருக்கும், 20 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. 80 சதவீத வங்கி கடன் வசதியுடன், இரண்டு சென்ட் முதல் ஐந்து சென்ட் வரை லேஅவுட் பிரிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பூங்கா, அகலமான தார்சாலை, சோலார் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.