/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநில எல்லையில் குப்பை குவிப்பு; தீ வைத்து எரிப்பதால் கடும் பாதிப்பு மாநில எல்லையில் குப்பை குவிப்பு; தீ வைத்து எரிப்பதால் கடும் பாதிப்பு
மாநில எல்லையில் குப்பை குவிப்பு; தீ வைத்து எரிப்பதால் கடும் பாதிப்பு
மாநில எல்லையில் குப்பை குவிப்பு; தீ வைத்து எரிப்பதால் கடும் பாதிப்பு
மாநில எல்லையில் குப்பை குவிப்பு; தீ வைத்து எரிப்பதால் கடும் பாதிப்பு
ADDED : ஜூன் 13, 2025 09:37 PM

பொள்ளாச்சி; தமிழக - கேரள மாநில எல்லையான, கோபாலபுரத்தில் ரோட்டின் ஓரத்தில் குப்பை குவித்து தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழக - கேரள மாநில எல்லையொட்டி, ராமப்பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலபுரம் உள்ளது. அங்கு, ஓட்டல், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது.
இந்நிலையில், சேகரமாகும் கழிவுகள், அங்குள்ள ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடி ஒட்டிய பகுதியில், ரோட்டோரம் குவிக்கப்படுகிறது. குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
இதனிடையே, அவ்வ போது குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால், அப்பகுதியே புகைமூட்டமாகி விடுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டுநர்கள், கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
கோபாலபுரத்தில், பிரதான ரோட்டோரம் குப்பை கொட்டப்படுவதுடன், தீயும் வைக்கப்படுகிறது. அதனால், ஏற்படும் புகையால், வழித்தடம் தெரியாத அளவுக்கு ரோடு முழுவதும் பரவுகிறது.
இதனால், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ஓட்டுநர்கள் விபத்துக்கு உள்ளாகும் சூழலும் ஏற்படுகிறது. ரோட்டோரத்தில் குப்பை கொட்டுவது தவறு, அதற்கு அவ்வப்போது தீ வைப்பது மாபெறும் தவறு. திடக்கழிவு மேலாண்மை செய்ய வேண்டிய ஊராட்சி பணியாளர்களே தீ வைப்பதை மன்னிக்க முடியாத தவறு. இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.