/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொடிசியாவில் துவங்கிய 'பர்னிச்சர் எக்ஸ்போ' கொடிசியாவில் துவங்கிய 'பர்னிச்சர் எக்ஸ்போ'
கொடிசியாவில் துவங்கிய 'பர்னிச்சர் எக்ஸ்போ'
கொடிசியாவில் துவங்கிய 'பர்னிச்சர் எக்ஸ்போ'
கொடிசியாவில் துவங்கிய 'பர்னிச்சர் எக்ஸ்போ'
ADDED : ஜூன் 27, 2025 11:13 PM

கோவை; அவிநாசி ரோடு, கொடிசியாவில், பர்னிச்சர் மற்றும் லைப்ஸ்டைல் கண்காட்சி நேற்று துவங்கியது. பர்னிச்சர், பேஷன் பொருட்கள் மற்றும் இன்டீரியர் உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருட்கள்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
100 அரங்குகள் கொண்ட இக்கண்காட்சியில் உயர்தர, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பர்னிச்சர் இடம்பெற்றுள்ளது. 20க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளில், 1200க்கும் மேற்பட்ட மாடல்களில் பர்னிச்சர்காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளிலிருந்து நேரடியாக வழவழைக்கப்பட்டு, பாதி விலையில் பர்னிச்சர் விற்பனை செய்யப்படுகிறது.
உற்பத்தி விலைக்கே கிடைப்பதால், பொதுமக்கள் மட்டுமின்றி சில்லறை விற்பனையாளர்களும் வாங்கி பயனடையலாம். பொருட்கள் வாங்க எவ்வித முன்பணமும் தேவையில்லை.
டெபிட், கிரெடிட் கார்டு வசதியுண்டு. வட்டியில்லா சுலப தவணை மற்றும் ஸ்பாட் லோன் கடனுதவி வசதியும் உள்ளது.
பழைய பர்னிச்சரை எக்ஸ்சேஞ்சு செய்யும் வதியும் உண்டு. நாளை வரை நடக்கும் கண்காட்சியை, காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.