ADDED : செப் 07, 2025 09:12 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.
கிணத்துக்கடவு, பொன்மலை (கனககிரி) வேலாயுதசுவாமி கோவிலில் பவுர்ணமி நாளையொட்டி பக்தர்கள் காவடி, வேல், தீர்த்தக்குடம் எடுத்து மலையை சுற்றி கிரிவலம் வந்து விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.