Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கேரம் சாம்பியன்களை தேடி இலவச பயிற்சி முகாம்

கேரம் சாம்பியன்களை தேடி இலவச பயிற்சி முகாம்

கேரம் சாம்பியன்களை தேடி இலவச பயிற்சி முகாம்

கேரம் சாம்பியன்களை தேடி இலவச பயிற்சி முகாம்

ADDED : மே 24, 2025 11:32 PM


Google News
கோவை: கோவை மாவட்ட கேரம் சங்கம் சார்பில், 'சாம்பியன்களை தேடி' என்ற தலைப்பில் இலவச கேரம் பயிற்சி முகாம் நான்கு நாட்கள் நடக்கிறது.

இது குறித்து, நடந்த நிருபர்கள் சந்திப்பில், முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜான் கூறியதாவது:

கோவையில் கேரம் விளையாட்டில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் பலர் உள்ளன. இந்த விளையாட்டில் புதியவர்களையும், பள்ளி மாணவர்களையும் அறிமுகம் செய்யவேண்டும் என்பதற்காக, கோவை மாவட்ட கேரம் சங்கம் சார்பில், இலவச கேரம் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

வரும், 29ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி முகாமில், 350 பேர் பங்கேற்கின்றனர். இதில், 175 பேர் அரசு பள்ளி மாணவர்கள்.

பயிற்சி முகாமில், கேரம் விளையாட்டில் உள்ள அடிப்படை விதிகள், விளையாடும் முறைகள், விளையாட்டின் நுட்பம் பற்றி, புதியவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இறுதி நாள் கேரம் போட்டி நடத்தப்படுகிறது.

இதில், 10 கேரம் சாம்பியன்களை தேர்ந்து எடுக்க இருக்கிறோம். போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 97510 13128, 94434 33653 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். கட்டணம் இல்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us