Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'ஆன்லைனில்' பகவத் கீதை இலவச பயிற்சி 7ல் துவக்கம்

'ஆன்லைனில்' பகவத் கீதை இலவச பயிற்சி 7ல் துவக்கம்

'ஆன்லைனில்' பகவத் கீதை இலவச பயிற்சி 7ல் துவக்கம்

'ஆன்லைனில்' பகவத் கீதை இலவச பயிற்சி 7ல் துவக்கம்

ADDED : ஜூலை 01, 2025 10:42 PM


Google News
கோவை; கோவை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், 7ம் தேதி முதல் 18 நாட்கள், 'ஆன்லைன்' வழியாக, தமிழில் பகவத் கீதை பயிற்சி வகுப்பு, இலவசமாக நடத்தப்படுகிறது.

வாழ்வில் ஏற்படும் நெருக்கடியான சூழ்நிலைகளிலும் சமநிலையோடு செயல்பட்டு, மன சாந்தியுடன் முன்னேறுவதற்கு வழிகாட்டும், வாழ்வியல் நெறிகள் பகவத் கீதையில் உள்ளன. இதை புரிந்து கொள்ள, தமிழில் ஆன்லைன் பயிற்சியை, இஸ்கான் ஏற்பாடு செய்துள்ளது. பகவத் கீதையின் 18 அத்தியாயங்களை, 18 நாட்களில் இலவசமாக கற்றுக் கொள்ளலாம்.

வரும், 7ம் தேதி பயிற்சி துவங்குகிறது. இரவு, 7:30 முதல், 9:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். பதிவு செய்தவர்களுக்கு மட்டும், 'லிங்க்' அனுப்பப்படும். பகவத் கீதையின் கருத்துக்கள் தமிழில் விளக்கப்படும்.

கேள்வி - பதிவு வாயிலாக சந்தேகங்கள் தீர்க்கப்படும். பயிற்சிக்குப் பின் சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு அவசியம். www.tamilgita.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம். 84896 69797, 77083 58616 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, கோவை 'இஸ்கான்' அமைப்பு தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us