/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ADDED : மார் 25, 2025 09:48 PM
பெ.நா.பாளையம்; இடிகரை பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
இளைஞர் செஞ்சிலுவை சங்கம், உயிர் மருத்துவ சமூக பரவலாக்க சங்கம், வட்டமலை பாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி, ராமகிருஷ்ணா பொது மற்றும் பல் மருத்துவமனை சார்பில் நடந்த இலவச பொது மற்றும் பல் மருத்துவ முகாமை இடிகரை பேரூராட்சி தலைவர் ஜனார்த்தனன் துவக்கி வைத்தார்.
துணை தலைவர் சேகர், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், மருத்துவர்கள் ஹரிஷ், அருண், கவுதம் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் பல் தொடர்பான பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட தலைவர் கேசவசாமி, திட்ட அலுவலர்கள் ஸ்ரீஜா, மாரியப்பன், ஜெயப்பிரகாஷ், இளைஞர் செஞ்சிலுவை சங்க அலுவலர் மாரி சேகர், உயர் மருத்துவ சமூக பரவலாக்க சங்க அலுவலர் சாந்தினி உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.