ADDED : பிப் 23, 2024 11:20 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இலவச கண் புரை பரிசோதனை முகாம் வரும், 27ம் தேதி நடக்கிறது.
இதில், கண்ணில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கண்புரை முற்றியவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
முகாமில், கண் குறைபாடு இருப்பவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்படுகிறது. மேலும், அறுவை சிகிச்சைகளும் இலவசமாக செய்யப்படுகிறது.
மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படும் நபர்களுக்கு, இலவச போக்குவரத்து, மருந்து மற்றும் உணவு போன்றவைகள் வழக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட பயனாளர்கள், கட்டாயம் ஆதார் கார்டு நகல் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.