Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கீரணத்தம் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு மோசடி மின் இணைப்பு; மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து துண்டிப்பு

கீரணத்தம் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு மோசடி மின் இணைப்பு; மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து துண்டிப்பு

கீரணத்தம் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு மோசடி மின் இணைப்பு; மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து துண்டிப்பு

கீரணத்தம் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு மோசடி மின் இணைப்பு; மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து துண்டிப்பு

ADDED : செப் 23, 2025 11:02 PM


Google News
கோவை; கீரணத்தம் காந்தி நகர் பகுதியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், 1,640 வீடுகள் உள்ளன.

இவற்றில், 10 வீடுகள் அவசர தேவைக்காக இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒப்பந்ததாரர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். அவற்றுக்கு முறைகேடாக மின் இணைப்பு கொடுத்துள்ளார்.

நான்கு ஆண்டுகளாக முறைகேடாக மின்இணைப்பு எடுத்திருப்பது தொடர்பாக, மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்காததால், கீரணத்தம் குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் சங்கம் - 2 சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அக்குடியிருப்புக்கு நேற்று நேரில் வந்த மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், முறைகேடாக இணைப்பு கொடுத்திருப்பது தெரியவந்தது.

இணைப்புகளை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். மற்ற குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

குடியிருப்போர் நலச்சங்க தலைவர் இளங்கோவன் கூறுகையில், ''பலமுறை தெரிவித்தும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சில அதிகாரிகள் ஆதரவாக செயல்படுகின்றனர். போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்த பின்னரே ஆய்வு நடத்தி, முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம்,'' என்றார்.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'முறைகேடாக எடுக்கப்பட்ட ஒரு இணைப்பில் இருந்து, 10 வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அது, துண்டிக்கப்பட்டது. வேறு வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றனர்.

குற்றவியல் நடவடிக்கை அவசியம்

சட்ட விரோதமாக, 10 வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது, மின் திருட்டு. சட்ட ரீதியாக சம்பந்தப்பட்டோர் மீது குற்றவியல் வழக்கு தொடர வேண்டும். 10 வீடுகளை எவ்வாறு ஒருவரே பயன்படுத்த முடியும். 10 வீடுகளை ஒருவர் ஆக்கிரமித்து, உள்வாடகைக்கு கொடுத்திருப்பது தெரியவந்தது. அவ்வீடுகளை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு அதிகாரிகள் மீட்க வேண்டும். அவ்வீடுகளை சட்ட விரோதமாக வாடகைக்கு கொடுத்தது யார் என அறிந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இவ்விரு குற்றச் செயல்களுக்கும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கின்றனர் என்பதே உண்மையாகி விடும். இவ்விஷயத்தில், மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us