/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ யானை தந்தம், சிறுத்தை பற்கள் விற்க முயன்ற நான்கு பேர் கைது யானை தந்தம், சிறுத்தை பற்கள் விற்க முயன்ற நான்கு பேர் கைது
யானை தந்தம், சிறுத்தை பற்கள் விற்க முயன்ற நான்கு பேர் கைது
யானை தந்தம், சிறுத்தை பற்கள் விற்க முயன்ற நான்கு பேர் கைது
யானை தந்தம், சிறுத்தை பற்கள் விற்க முயன்ற நான்கு பேர் கைது
ADDED : மார் 23, 2025 11:16 PM

கோவை : யானை தந்தம், சிறுத்தை பற்களை கடத்தி வந்து விற்க முயன்ற நான்கு பேரை, வனத்துறையினர் கைது செய்தனர்.
சேலம், மேட்டூரில் இருந்து கோவைக்கு யானை தந்தம் மற்றும் சிறுத்தை பற்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், கோவை வனச்சரக அலுவலர் தலைமையில், வனவர் மற்றும் வனப் பணியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, கோவை வனச்சரகம், காந்திபுரம், ராம் நகர், ராமர் கோவில் அருகே வந்த கார் ஒன்றை நிறுத்தி, சோதனை செய்தனர்.
அதில், யானை தந்தம், சிறுத்தை பற்கள் உள்ளிட்டவை இருந்தன. காரில் வந்த கிருபா, 24, சதீஷ்குமார், 26, விஜயன், 45, கவுதம், 26 ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து வன உயிரின பொருட்களை கைப்பற்றி, வனக்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.