/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மன்ற போட்டி பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மன்ற போட்டி
பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மன்ற போட்டி
பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மன்ற போட்டி
பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மன்ற போட்டி
ADDED : செப் 01, 2025 07:19 PM
பொள்ளாச்சி:
அனைத்து அரசுப்பள்ளிகளில்,6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வட்டார அளவிலான மன்றப் போட்டிகள், செப்., 2 முதல் 5 வரை நடைபெற உள்ளன. பள்ளி அளவில் நடந்த போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்கள் பங்கேற்பர்.
தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய மன்றப் போட்டிகள், வினாடி - வினா, சிறார் திரைப்படம் தொடர்பான போட்டிகள் உள்ளிட்ட பள்ளி அளவிலான சுற்றுகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.
இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தற்போது வட்டார அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன. மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தவும், பொது அறிவை வளர்க்கவும் இப்போட்டிகள் உதவும், என, கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.