/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மருதமலையில் சிறுத்தை நடமாட்டம் பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கைமருதமலையில் சிறுத்தை நடமாட்டம் பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
மருதமலையில் சிறுத்தை நடமாட்டம் பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
மருதமலையில் சிறுத்தை நடமாட்டம் பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
மருதமலையில் சிறுத்தை நடமாட்டம் பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
ADDED : ஜன 14, 2024 12:43 AM
கோவை;மருதமலை பகுதியில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு நடைபாதை, மலைப்பாதை வழியாக செல்ல முடியும்.
அடர் வனப்பகுதி வழியாக செல்லும் இப்பாதை, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பாதையில், யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அவ்வப்போது இருந்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, மருதமலை கோவிலில் இருந்து அடிவாரத்திற்கு பக்தர்கள் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோரம் சிறுத்தை ஒன்று தென்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வரும் முன், சிறுத்தை புதருக்குள் மறைந்தது. இதை அவ்வழியாக சென்ற ஒரு வாகன ஓட்டி, வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.
மாவட்ட வனத்துறை அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருதமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, வெளியூர்களில் இருந்து வருவோர், கோவில் அடிவார உள்ளூர்வாசிகளிடம் விசாரித்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.


