Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மைதானம் மாரியம்மன் கோவிலில் இன்று பூச்சாட்டு

மைதானம் மாரியம்மன் கோவிலில் இன்று பூச்சாட்டு

மைதானம் மாரியம்மன் கோவிலில் இன்று பூச்சாட்டு

மைதானம் மாரியம்மன் கோவிலில் இன்று பூச்சாட்டு

ADDED : மார் 25, 2025 12:32 AM


Google News
மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் நகரில், ஊட்டி சாலையில் உள்ள காந்தி மைதானத்தில், மிகவும் பழமையான மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், குண்டம் திருவிழாவும், தேரோட்டமும் வெகு விமரிசையாக நடைபெறும்.

இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு குண்டம் மற்றும் தேர்த் திருவிழா, இன்று இரவு பூச்சாட்டுடன் துவங்குகிறது. ஏப்ரல் 1ம் தேதி கம்பம் நடுதலும், மூன்றாம் தேதி கொடியேற்றமும், நாலாம் தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.

ஏழாம் தேதி தேர் மகுடம் ஏற்றுதலும், குண்டம் திறப்பும் நடைபெற உள்ளது. எட்டாம் தேதி காலை, 8:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் சுவாமி அழைப்பும், 8:30 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது. ஒன்பதாம் தேதி மாலை, 4:30 மணிக்கு அம்மன் சுவாமி தேரோட்டம் நடைபெற உள்ளது.

10ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 11ம் தேதி காலை, 8:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதலும், மாலையில் மஞ்சள் நீராட்டும், மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது.

14ம் தேதி மறு பூஜையும், அன்னதானமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி செய்து வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us