/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நிலத்தை கபளீகரம் செய்து தகராறு; ஐந்து பேர் கைது நிலத்தை கபளீகரம் செய்து தகராறு; ஐந்து பேர் கைது
நிலத்தை கபளீகரம் செய்து தகராறு; ஐந்து பேர் கைது
நிலத்தை கபளீகரம் செய்து தகராறு; ஐந்து பேர் கைது
நிலத்தை கபளீகரம் செய்து தகராறு; ஐந்து பேர் கைது
ADDED : ஜூன் 15, 2025 11:07 PM
கோவை; இடப்பிரச்னையில் டாக்டருடன் தகராறில் ஈடுபட்ட எஸ்.ஐ., உட்பட, ஐந்து பேரை போலீசார் கைது செய்து பிணையில் விடுவித்தனர்.
செல்வபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவருக்கு செல்வபுரம் பேரூர் ரோட்டில், 35 சென்ட் இடம் இருந்தது. இதை 30 ஆண்டுகளுக்கு முன், சற்குணம் என்பவருக்கு இடத்தை பாதுகாக்கவும், விவசாயம் செய்யவும் கொடுத்தார்.
இந்நிலையில் சற்குணம், அவ்விடத்தை தனது பெயரில் மாற்றியதாக தெரிகிறது. இதை, பழனியின் இரு மகள்கள் கண்டுபிடித்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றத்தில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து, அவ்விடத்தை டாக்டர் ஒருவருக்கு விற்பனை செய்தனர்.
அவ்விடத்தை சுத்தம் செய்து, வேலி அமைக்க டாக்டர் கடந்த சில தினங்களுக்கு முன் சென்றார். அப்போது சற்குணம், மருமகனும், திருப்பூர் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., யுமான பிரபு, சற்குணத்தின் மகன், பிரதீப் மற்றும் அவரது மகள்கள் இருவர், டாக்டரை தடுத்து தகராறில் ஈடுபட்டனர். அவ்விடத்தில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு சென்ற செல்வபுரம் போலீசார், சற்குணம் உட்பட ஐந்து பேரை கைது செய்து, பிணையில் விடுவித்தனர்.