ADDED : செப் 04, 2025 10:55 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மைக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்பு தொடக்க விழா நடந்தது. கல்லுாரி இயக்குனர் (பொறுப்பு) சர்மிளா, வரவேற்றார்.
கோவை மேலாண்மை சங்க தலைவர் நிர்வாகி நித்யானந்தன்தேவராஜ் கலந்து கொண்டு பேசுகையில், ''மேலாண்மை கல்வி ஒரு கலை. நாட்டு நடப்பு மற்றும் பொருளாதாரத்தை அறிந்து கொள்ள தினமும் செய்தித்தாள் படிக்க வேண்டும். கல்வியை மகிழ்ச்சியாக, சந்தோசமாக கற்க வேண்டும்,'' என்றார்.
மாணவர்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார். விழாவில், என்.ஜி.எம். கல்லுாரி இயக்குனர் சரவணபாபு பேசினார். முடிவில், பேராசிரியர் தியாகு நன்றி கூறினார்.