/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வி.எஸ்.பி. பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா வி.எஸ்.பி. பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா
வி.எஸ்.பி. பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா
வி.எஸ்.பி. பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா
வி.எஸ்.பி. பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா
ADDED : செப் 01, 2025 11:26 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வி.எஸ்.பி. பொறியியல் கல்லுாரியில் நேற்று முதலாம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் பாலுசாமி பேசுகையில், ''இங்கு படித்த மாணவர்கள், பல முன்னணி நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் பணி புரிகின்றனர். இக்கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்றும், தொழில்முனைவோர்களாகியும் சிறந்து விளங்க வேண்டும். பெற்றோரை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
கல்வியாளர் ஜெயந்தாஸ்ரீ பேசுகையில், ''மாணவர்கள் தன்னம்பிக்கையை விட்டு விடக்கூடாது, முயற்சிகள் தொடர வேண்டும். பல மொழிகளை கற்றுக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்டேட்டாக இருக்க வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில் கல்லூரி துணை தலைவர்கள் சதீஷ்குமார், நந்தினி, முதல்வர் வேல்முருகன், துணை முதல்வர் ராஜு, கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.