/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பழங்குடியினருக்கு தீ தடுப்பு பயிற்சிபழங்குடியினருக்கு தீ தடுப்பு பயிற்சி
பழங்குடியினருக்கு தீ தடுப்பு பயிற்சி
பழங்குடியினருக்கு தீ தடுப்பு பயிற்சி
பழங்குடியினருக்கு தீ தடுப்பு பயிற்சி
ADDED : ஜன 25, 2024 12:01 AM
உடுமலை : ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை கோட்டத்தில் உள்ள, பழங்குடியின மக்களுக்கும் தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
உடுமலை, அமராவதி, வந்தரவு மற்றும் கொழுமம் ஆகிய வனச்சரகங்கள், ஆனைமலை புலிகள் காப்பத்தில் அமைந்துள்ளது.
இங்கும், வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு, முகாம்கள் அமைக்கப்பட்டு, வேட்டை தடுப்புக்காவலர்களால் கண்காணிக்கப்பட்டும் வருகின்றன. இனி வரும் நாட்களில், வனத்தில், வறட்சி நிலவினால் மரங்கள், செடி மற்றும் கொடிகள் காய்ந்து விடும்.
இதேபோல, தடுப்பணைகள், கசிவு நீர் குட்டைகள், ஆறுகள் போன்ற நீராதாரங்களும் வறண்டு விடும் சூழல் உள்ளது.
அவ்வகையில், வறட்சியின் காரணமாக, வனத்தில் ஏற்படும் காட்டுத்தீயை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக, ஆங்காங்கே, தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டும், தீயை அணைக்க, தற்காலிக தீத்தடுப்பு காவலர்கள், நியமிக்கப்பட்டும் வருகின்றனர்.
அதேநேரம், செட்டில்மென்ட் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கும், வனத்துறையால், தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'செட்டில்மென்ட் மக்களுக்கு, தீ ஏற்படும் விதம் மற்றும் அதனை தடுக்க கையாளப்பட வேண்டிய முறைகள் குறித்து விளக்கப்படும். தீ தடுப்பு காலங்களில், மலைவாழ் மக்களும் உதவ முன்வர வேண்டும். இதற்காக, அவர்களுக்கும் தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படும்,' என்றனர்.