/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுகாதார நிலையம் அருகே தீ விபத்தால் பரபரப்பு சுகாதார நிலையம் அருகே தீ விபத்தால் பரபரப்பு
சுகாதார நிலையம் அருகே தீ விபத்தால் பரபரப்பு
சுகாதார நிலையம் அருகே தீ விபத்தால் பரபரப்பு
சுகாதார நிலையம் அருகே தீ விபத்தால் பரபரப்பு
ADDED : செப் 24, 2025 11:36 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே வடுகபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. பொள்ளாச்சி நகரம், வடுகபாளையம் பகுதி மக்கள், சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று சுகாதார நிலையம் அருகே கொட்டி வைக்கப்பட்டு இருந்த பேப்பர் பண்டல்களில், தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர், தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.