/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/புனித பவுல் போரானா தேவாலயத்தில் திருவிழாபுனித பவுல் போரானா தேவாலயத்தில் திருவிழா
புனித பவுல் போரானா தேவாலயத்தில் திருவிழா
புனித பவுல் போரானா தேவாலயத்தில் திருவிழா
புனித பவுல் போரானா தேவாலயத்தில் திருவிழா
ADDED : பிப் 06, 2024 01:39 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி புனித பவுல் போரோனா தேவாலயத்தில் திருவிழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் புனித பவுல் போரோனா தேவாலயத்தில் திருவிழா, பங்கின் பாதுகாவலரான புனித பவுல், ரத்த சாட்சியாக மரித்த புனித செபஸ்தியார் ஆகியோரின் விழாவாக கடந்த, இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டன.
பங்கு தந்தை ஜான்சன் கண்ணாம்பாடம் கொடியேற்றி வைத்தார். பங்கு தந்தை சாஜன் திருப்பலி வழிபாடு செய்தார். ஓ.எஸ்.ஏ., சபா பங்கு தந்தை சுமேஷ் இல்லிக்கப்பறம்பில் திருநாள் மறையுரை வழங்கினார்.
பங்கு தந்தை ஜோஸ் கண்ணுங்குழி, உதவி பங்குத்தந்தை ஆண்டனி சாலக்கல், தேவாலய கைக்காரன் வர்கீஸ்கொச்சு பறம்பில், சோனி பால்சன் முன்டன்குரியன், ஒருங்கிணைப்பாளர் ேஷாபி ஆண்டனி ஆலுார், திருவிழா பி.ஆர்.ஓ., ஜோஸ் வாழப்பிள்ளி ஆகியோர் தலைமையில் திருவிழா நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட வர்ணத்தேரில், புனிதரின் புனித உருவம் எழுப்பப்பட்டது. அலங்காரத்தேர் பவனி, முத்து குடை வாத்திய மேளங்களுடன் பொள்ளாச்சி முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. பொள்ளாச்சி லுார்து மாதா சர்ச் ஜேக்கப், சிலுவை ஆசீர்வாதத்தை நடத்தினார். அதன்பின், வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.