/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அங்கன்வாடி மையம் அருகே புற்று வளர்வதால் அச்சம்அங்கன்வாடி மையம் அருகே புற்று வளர்வதால் அச்சம்
அங்கன்வாடி மையம் அருகே புற்று வளர்வதால் அச்சம்
அங்கன்வாடி மையம் அருகே புற்று வளர்வதால் அச்சம்
அங்கன்வாடி மையம் அருகே புற்று வளர்வதால் அச்சம்
ADDED : பிப் 06, 2024 01:36 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, மாப்பிள்ளைகவுண்டன்புதுாரில், அங்கன்வாடி மையம் அருகே புற்று வளர்வதால் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் சேர்வக்காரன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாப்பிள்ளைகவுண்டன்புதுாரில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
இங்கு, மாப்பிள்ளைகவுண்டன்புதுார், சேர்வக்காரன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அங்கன்வாடி அருகே புற்று வளர்ந்துள்ளதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு விளையாட்டோடு கல்வியும் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மையத்தை சுற்றிலும் புதர் மண்டி காணப்படுவதுடன், புற்றும் வளர்ந்துள்ளது.
போதிய பாதுகாப்பு இல்லாத சூழலில், விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர்.
மேலும், மையத்தில் உள்ளோரும் அச்சத்துடன் பணியற்றுகின்றனர். எனவே, மையத்துக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.