/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.ஜி.வி., பள்ளியில் தந்தையர் தினம் கொண்டாட்டம் பி.ஜி.வி., பள்ளியில் தந்தையர் தினம் கொண்டாட்டம்
பி.ஜி.வி., பள்ளியில் தந்தையர் தினம் கொண்டாட்டம்
பி.ஜி.வி., பள்ளியில் தந்தையர் தினம் கொண்டாட்டம்
பி.ஜி.வி., பள்ளியில் தந்தையர் தினம் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 15, 2025 10:13 PM

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள வரப்பாளையம் பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தந்தையர் தினத்தையொட்டி மாணவர்கள் தந்தைக்கு கடிதம் எழுதினர்.
பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். இதில், தந்தையாரின் உழைப்பு, அன்பு, குழந்தைகளின் மேல் அவர் வைத்துள்ள நம்பிக்கை, பற்று, அக்கறை ஆகியவை குறித்து விளக்கினார். கடிதம் எழுதுவதால், குடும்ப உறவுகள் வலுவடையும். நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் அவரவர் தந்தையர் குறித்து கடிதம் எழுதினர். சிறந்த கடிதம் எழுதிய மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.