/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குட்டையில் கழிவுநீர்; விவசாயிகள் புகார் குட்டையில் கழிவுநீர்; விவசாயிகள் புகார்
குட்டையில் கழிவுநீர்; விவசாயிகள் புகார்
குட்டையில் கழிவுநீர்; விவசாயிகள் புகார்
குட்டையில் கழிவுநீர்; விவசாயிகள் புகார்
ADDED : செப் 10, 2025 10:30 PM
கோவை; கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட காளப்பட்டியில், புல எண்: 160/1, 1032/1, 930, 843, 865, 1363 ஆகியவை, விவசாய பாசனத்துக்கான நன்னீர் குட்டைகளாக இருந்தன.
இவற்றில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது. குட்டையில் தேங்கியுள்ள நீரை, விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி விவசாயிகள், 'கழிவுநீர் கலப்பதால், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. கழிவு நீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.இக்குட்டையில் மழை நீரை தேக்கி, விவசாயத்துக்கு பயனளிக்கும் வகையில் மாற்ற வேண்டும். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்' என்றனர்.