/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கால்வாயில் நீர் திறப்பு ;விவசாயிகள் மகிழ்ச்சிகால்வாயில் நீர் திறப்பு ;விவசாயிகள் மகிழ்ச்சி
கால்வாயில் நீர் திறப்பு ;விவசாயிகள் மகிழ்ச்சி
கால்வாயில் நீர் திறப்பு ;விவசாயிகள் மகிழ்ச்சி
கால்வாயில் நீர் திறப்பு ;விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : பிப் 23, 2024 10:51 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோவில்பாளையம் கிளை கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு, கோவில்பாளையம் மற்றும் அதன் சுற்று பகுதியில், நான்காயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் உள்ளது. தற்போது, பி.ஏ.பி., அணையில் இருந்து, முதல் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் நீர் இருப்பை பொருத்து, நிலைப்பயிர்களை காப்பாற்ற பாசன நீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கோவில்பாளையம் கிளை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், கோவில்பாளையம் சுற்றுவட்டார கிராமங்களான, தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதுார், கக்கடவு, கப்பளாங்கரை கிராம விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
பாசன நீரானது ஏழு நாட்கள் வினியோகிக்கப்படுகிறது. இதனால், கோவில்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விளைநிலங்கள் பயன் பெரும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கோடை காலம் துவங்கும் தருவாயில், பி.ஏ.பி., பாசன நீர் வழங்கப்படுவது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தென்னை மட்டுமல்லாமல் பிற வகை காய்கறிகள் மற்றும் சிறுதானிய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்,' என்றனர்.