Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஜமாபந்தியில் விவசாயி முறையீடு அய்யா... குளத்தை காணோம்! ஆக்கிரமிப்பால் மாயமான மர்மம்

ஜமாபந்தியில் விவசாயி முறையீடு அய்யா... குளத்தை காணோம்! ஆக்கிரமிப்பால் மாயமான மர்மம்

ஜமாபந்தியில் விவசாயி முறையீடு அய்யா... குளத்தை காணோம்! ஆக்கிரமிப்பால் மாயமான மர்மம்

ஜமாபந்தியில் விவசாயி முறையீடு அய்யா... குளத்தை காணோம்! ஆக்கிரமிப்பால் மாயமான மர்மம்

ADDED : ஜூன் 25, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
அன்னுார்: 'கோவில்பாளையத்தில் ஆக்கிரமிப்பால் குளம் மாயமாகி விட்டது' என ஜமாபந்தியில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அன்னூர் தாலுகா அலுவலகத்தில், நேற்று எஸ்.எஸ். குளம் உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நடந்தது. எஸ்.எஸ்.குளம், இடிகரை பேரூராட்சிகள் மற்றும் ஏழு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் மகளிர் உரிமைத் தொகை கோரி திரண்டதால், தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அலுவலகத்திற்குள் நிற்க கூட இடமில்லாததால், அலுவலகத்தின் முன்புறம் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

குமாரபாளையத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் கூறுகையில், ''சொந்த வீடு இல்லாத, போதுமான வருமானம் இல்லாத எங்களைப் போல் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை உத்தரவு கிடைக்கவில்லை. ஆனால், சொந்த வீடு உள்ள, வசதியாக உள்ள பலருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் மூன்று முறை விண்ணப்பம் கொடுத்து விட்டோம். தகுதி உள்ள எங்களுக்கு உத்தரவு வழங்க வேண்டும்' என்றனர். கோவில்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னுச்சாமி சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சுரேஷிடம் அளித்த மனுவில், 'கோவில்பாளையம் துடியலுார் சாலையில், அண்ணா நகரில் 15 ஏக்கர் குளம் உள்ளது. இந்த குளத்துக்கு மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து அதிக அளவில் மழை நீர் வரும். இந்த குளத்தில் நீர் நிரம்பினால், சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாய நிலங்கள் பயனடையும். ஆனால், சில ஆண்டுகளாக இந்த குளத்தை சிறிது சிறிதாக ஆக்கிரமித்து விட்டனர்.

'தற்போது ஐந்து ஏக்கர் மட்டுமே உள்ளது. 10 ஏக்கர் குளம் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. ஆக்கிரமிப்பு காரணமாக, இங்கு மழை நீரும் தேங்குவதில்லை. உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை மீட்க வேண்டும்.

எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படும் உணவு விடுதியால், இடையூறு ஏற்படுகிறது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us