/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிப்புமேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிப்பு
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிப்பு
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிப்பு
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிப்பு
ADDED : ஜன 01, 2024 12:41 AM
கோவை;திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில், வரும், ஜன., இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்,திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே, வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு ரயில், ஞாயிறு இரவு, 7:00 மணிக்கு திருநெல்வேலியில்(06030) இருந்து புறப்பட்டு மறுநாள் காலை, 7:30 மணிக்கு, மேட்டுப்பாளையம் வந்தடையும்.
அதேபோல், திங்கள் இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில்(06029) இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இச்சிறப்பு ரயிலின் இயக்கம், டிச., 27ம் தேதியுடன் முடிவுற்ற நிலையில், தற்போது, ஜன., 29 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, ரயில்வேநிர்வாகம் அறிவித்துள்ளது.
சிறப்பு ரயிலில் ஏ.சி., இரண்டடுக்கு, மூன்றடுக்கு, படுக்கை வசதி, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
சிறப்பு ரயில் சேரன்மாதேவி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார், கோவை ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.