ADDED : மார் 25, 2025 09:59 PM

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த புறம்போக்கு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
காரமடை அருகே பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வண்டி பாதை புறம்போக்கு இடத்தை, தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இதனிடையே அந்த இடத்தில் மக்கள் சிலர் அத்துமீறி குடிசைகளும் அமைத்ததால், பிரச்சனை ஏற்பட்டது.
இதனிடையே வருவாய் துறையினர், காரமடை போலீசார் உடன் அந்த இடத்திற்கு நேற்று சென்று, நில அளவை மேற்கொண்டு, வண்டி பாதை புறம்போக்கு நிலத்தை மீட்டு, அப்பகுதியில் கற்களை நட்டு வைத்தனர். இது குறித்து வருவாய் துறையினர் கூறுகையில், ''முதல் கட்டமாக கற்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அளிக்கப்படும்,'' என்றனர்.