/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வால்பாறை-ஆழியாறு இடையே 'ரோப்கார்' அமைக்க எதிர்பார்ப்பு வால்பாறை-ஆழியாறு இடையே 'ரோப்கார்' அமைக்க எதிர்பார்ப்பு
வால்பாறை-ஆழியாறு இடையே 'ரோப்கார்' அமைக்க எதிர்பார்ப்பு
வால்பாறை-ஆழியாறு இடையே 'ரோப்கார்' அமைக்க எதிர்பார்ப்பு
வால்பாறை-ஆழியாறு இடையே 'ரோப்கார்' அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 13, 2025 09:51 PM

வால்பாறை; வால்பாறை - ஆழியாறு இடையே ரோப்கார் இயக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்வதை போன்று, வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து வருகிறது.இந்நிலையில், வால்பாறையில் சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், ஆழியாறு - வால்பாறை இடையே 'ரோப்கார்' அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.
தங்கும்விடுதி உரிமையாளர்கள் கூறியதாவது:
வால்பாறை அடுத்துள்ள, அய்யர்பாடி ரோப்வே எஸ்டேட்டில் இருந்து ஆழியாறு வரை, 51 ஆண்டுகளுக்கு முன் வரை, 'ரோப்கார்' இயக்கப்பட்டது. ரோடு விரிவாக்கத்திற்கு பின், 'ரோப்கார்' இயக்கம் நிறுத்தப்பட்டது.
சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், அவர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் வால்பாறையிலிருந்து (அய்யர்பாடி ரோப்வே) ஆழியாறு வரை மீண்டும் 'ரோப்கார்' இயக்க வேண்டும். இதனால், அரசுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைவார்கள்.
இவ்வாறு, கூறினர்.