ADDED : ஜூன் 25, 2025 11:29 PM
கோவை; கோவை அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு, இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பாடநூல்கள், சத்துணவு, காலணி, சீருடை, பேருந்து இலவச பயண அட்டை, புத்தகப் பை, கணித உபகரணங்கள், வண்ண பென்சில்கள், புவியியல் வரைபடங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கோவை மாவட்டத்தில், 2025 - 2026 கல்வியாண்டில், 80 ஆயிரம் புத்தகப்பை, 22 ஆயிரம் கணித உபகரணப் பெட்டி, 56 ஆயிரம் காலணிகள், 1 லட்சத்து 12 ஆயிரம் காலுறை, 68 ஆயிரம் சீருடைகள், புவியியல் வரைபடங்கள், கிரையான்கள், வண்ணப் பென்சில்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப வட்டார மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.